நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வந்த சிவப்பு கார் இன்சூரன்ஸ் காலாவதியானது என்று நெட்டிசன்கள் சிலர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய்யின் கார் இன்சூரன்ஸ் இன்னும் இருக்கிறது என்று ஆதாரத்துடன் தவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை நீலாங்கரையில் வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது வீட்டில் இருந்து ரசிகர்ள் புடைசூழா சிவப்பு நிற காரில் வந்திருந்தார். நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார்.
அதற்கு பிறகு நெட்டிசன்கள் சிலர், விஜய் வந்த சிவப்பு நிற கார் இன்சூரன்ஸ் காலாவதியான வாகனம். சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் காருக்கு இன்சூரன்ஸ்கூட கட்டுவதில்லையா என்று கேள்வி எழுப்பி சமுக ஊடகங்களில் பதிவிட்டதால் சர்ச்சையானது.
இந்த நிலையில், நடிகர் விஜய் வந்த காருக்கு இன்சூரன்ஸ் காலாவதியாக வில்லை. அந்த சிவப்பு நிற காருக்கு மே 28, 2022 வரை இன்சூரன்ஸ் உள்ளது என்று ஆதாரத்துடன் பதிலளித்து கார் இன்சூரன்ஸ் சர்ச்சைக்கு விஜய் ரசிகர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக விஜய் கார் இன்சூரன்ஸ் பற்றி சமூக ஊடகங்களில் சர்ச்சை பதிவுகள் உலா வந்த நிலையில், நடிகர் விஜய்யின் கார் இன்சூரன்ஸ் குறித்து ஆதாரத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் தாளில், ஜோசப் விஜய் சி என்ற பெயரில் உள்ள அந்த கார் இன்சூரன்ஸ் மே 28, 2022 வரை செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், நடிகர் விஜய்யின் கார் இன்சூரன்ஸ் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, யாரும் தவறான தகவல்களைப் பர்ப்பாதீர்கள் என்று சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"