Advertisment

வெளிநாட்டு பெண்ணுடன் ரொமான்ஸ்...நடிகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

எந்தவித விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த இளைஞராக இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

விஜய் தேவரகொண்டா ரொமான்ஸ்:

அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. காதல் முறிவு ஏற்பட்ட இளைஞராக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவர்  ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு பெண் ரசிகைகள் ஏராளம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.இவர் நடிப்பில் நோட்டா படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவருடன்  விஜய்  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் யார்? என்பது குறித்தும் ரசிகர்கள்  சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றன.

publive-image

ஏற்கனவே விஜய் விம்மி என்ற வெளிநாட்டவரை காதலிப்பதாகவும்,அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுக்குறித்து விஜய்  தரப்பிலிருந்து எந்தவித விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

Kollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment