கடைசியாக எப்போ செக்ஸ் வச்சீங்க? பிரபல நடிகரிடம் டி.வி ஆங்கர் ஷாக் கேள்வி

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் காஃபி வித் கரன் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் காஃபி வித் கரன் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கடைசியாக எப்போ செக்ஸ் வச்சீங்க? பிரபல நடிகரிடம் டி.வி ஆங்கர் ஷாக் கேள்வி

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகரிடம் தொகுப்பாளர் கடைசியாக எப்போது செக்ஸ் வைத்துக்கொண்டீர்கள் என்று கேட்ட கேள்வி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.

Advertisment

தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகரான வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவர்,  தற்போது இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கதில் லைகர் என்றும் படத்தில் நடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பங்கேற்றுள்ளார். ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த வாரம் நடிரக சமந்தா மற்றும் நடிகர் அக்ஷைகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பான ப்ரமோவை கரன்ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ப்ரமோவில் கரன் விஜய் தேவரகொண்டாவிடம்,  தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அதில், திடீரென நீங்கள் கடைசியாக எப்போது செக்ஸ் வைத்துக்கொண்டீர்கள் என்று கேட்கிறார். இந்த கேள்வியை கேட்டு சிரிக்கும் விஜய், அதை தவிர்த்துவிடுமாறு கூறுகிறார். அத்துடன் ப்ரமோ முடிந்துவிட்ட நிலையில், அந்த கேள்விக்கு விஜய் தேவரகொண்டா பதில் சொன்னாரா இல்லையா என்பது எபிசோடு பார்க்கும்போது தெரியவரும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: