கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பயோபிக் படத்தில் முக்கிய கேரக்டரில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ரசிகர்களை பெரிதாக ஈர்த்த நடிகர் விஜய் தேவ்ரகொண்டா தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவருடன் நடிக்க விருப்பமும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா
இந்நிலையில், கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘83’ படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘83’ படத்தில் கபில் தேவ் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கேரக்டரில் விஜய்தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.
தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து வரும் விஜய் தேவரக்கொண்டா விரைவில் தனது பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.