விஜய் தேவராகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஹாலிவுட் ஸ்டைலில் விஜய் சமந்தா இந்த படத்திற்கு ப்ரமோஷன் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள படம் குஷி. ஷிவ் நிர்வாணா இயக்கியுள்ள இந்த படத்தில், சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். காதல் திருமணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ளது.
இஸ்லாமிய பெண்ணான சமந்தாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா இரு வீட்டையும் எதிர்த்து சமந்தாவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் சமந்தா இஸ்லாமியர் அல்ல ஒரு பிராமணர் பெண் என்பது தெரியவருகிறது. அதன்பிறகு இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ பிரச்னைதான் கதை என்பது படத்தின் டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. படத்தின் டிரெய்லர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குஷி படம் வெளியான இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், விஜய சமந்தா இருவரும் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தங்களது ப்ரமோஷன்களை தொடர்ந்துள்ள இருவரும் தங்களுக்கு இடையே உள்ள கெமிஸ்ரியை வெளிக்காட்டுவது போல், மேடையில் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.
2004ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட்டில் த நோட்புக் படத்துக்காக சிறந்த முத்தத்துக்கான விருதை அப்படத்தின் நடிகர்களான ரயான் கோஸ்லிங், ரேச்சல் மெக் ஆடம்ஸ் ஜோடி வென்றிருந்தனர். இந்த விருதை அளிககும் போது ரயான் கோஸ்லிங் மேடையில் சட்டையைக் கழற்றியபடியும் நடிகை ரேச்சல் மெக் ஆடம்ஸை தூக்கிச் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது இந்த ட்ரெண்ங்கை டோலிவுட்டில் கொண்டு வந்துள்ள விஜய் தேவரகொண்டா மேடையில் சட்டையை கழற்றிவிட்டு சமந்தாவை தூக்கி நடனமாடியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.