Advertisment

விஜய் தேவரகொண்டா ஜெராக்ஸ், உண்மை இல்லை - ஸ்ரீ ரெட்டி

விஜய் தேவரகொண்டாவின் ஆடை வடிவமைப்பு சில நேரங்களில் ரன்வீர் சிங் போல் இருப்பாதாக அவ்வப்போது ரசிகர்களிடம் கருத்து பரவிவந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய் தேவரகொண்டா ஜெராக்ஸ், உண்மை இல்லை - ஸ்ரீ  ரெட்டி

vijay devarakonda, விஜய் தேவரகொண்டா,shri reddy

தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் ஸ்ரீ ரெட்டி, சினிமாவில்  வாய்ப்பு வாங்கித் தருவதாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தன்னை பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில்  இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாநத்,நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றோர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

Advertisment

இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவரகொண்டா குறித்து ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். "விஜய் தேவரகொண்டா, நாங்கள்  உங்களை அதிகம் விரும்புகிறோம். நீங்கள் ரன்வீர் சிங்-ஐ.......நகலெடுக்க தேவையில்லை" என்று தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் ஆடை வடிவமைப்பு சில நேரங்களில் ரன்வீர் சிங் போல் இருப்பாதாக அவ்வப்போது ரசிகர்களிடம் கருத்து பரவிவந்தது. விஜய் தேவரகொண்டா-விடம் உண்மையை எதிர் பார்க்கிறோம், நகலை அல்ல என்ற ஸ்ரீ ரெட்டியின் பதிவு அதை பிரதிபலிப்பதாக உள்ளது.

Sri Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment