/indian-express-tamil/media/media_files/levqICarZnlLppKtgD9J.jpg)
விஜய் - விஷால்
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ரூ1 கோடி நிதியுதவி அளித்துள்ள நிலையில், விஜயின் செயலுக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துள்ளதது.
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டிட பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், போதிய நிதி இல்லாத காரணத்தால், இதுவரை கட்டிடப்பணிகள் முடியாமல் இருக்கும் நிலையில், முன்னணி நடிகர்கள் தலா 1 கோடி வைப்பு நிதியாக கொடுத்தால் கட்டிட பணிகளை தொடங்கலாம் என்று நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகரும், அமைச்சருமான உதயநிதி முதல் ஆளாக ரூ1 கோடி நிதியுதவி அளித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கார்த்தி விஷால் மற்றும் பூச்சி முருகன் முன்னிலையில், ரூ1 கோடி நிதியுதவி அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடிகர் சங்கத்திற்கு ரூ1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சங்கத்தின் செயலாளர் நடிகர் விஷால் தனது எக்ஸ் பககத்தில், “விஜய், நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அவருக்கு நிறைய அர்த்தம். சரி, எங்கள் நடிகர்சங்கம் கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் எங்கள் சொந்த தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.
@actorvijay Thank u means just two words but means a lot to a person wen he does it from his heart. Well, am talking about my favourite actor our very own #ThalapathiVijay brother for DONATING ONE CRORE towards our #SIAA#NadigarSangam building work. God bless u.
— Vishal (@VishalKOfficial) March 12, 2024
Yes we always… pic.twitter.com/EzJtoJaahu
மேலும் “உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்று நாங்கள் எப்போதும் அறிந்தோம். இப்பொழுதெல்லாம் அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டீர்கள் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தனது அடுத்த படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகும் இந்த படம், விஜய் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால், அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.