Advertisment

விஜயகாந்த் புகழை பயன்படுத்தி தனது மகனை பிரபலமாக்கிய எஸ்.ஏ.சி; விஜய் த்ரோபேக் வீடியோ

செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் தம்பியாக விஜய்யை நடிக்க வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்; என்னை பிரபலமாக்க என் அப்பா செய்த திட்டம் அது; விஜயகாந்த் நட்புக்காக நடித்துக் கொடுத்தார்; விஜய் பகிரும் த்ரோபேக் வீடியோ

author-image
WebDesk
New Update
vijayakanth vijay

செந்தூரப்பாண்டி திரைப்பட போஸ்டர்

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் சென்னை மியாட் (MIOT) மருத்துவமனையில் வியாழக்கிழமை மரணமடைந்ததை அடுத்து அவரைப் பற்றிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vijay explains how dad SA Chandrasekar used Vijayakanth’s popularity to launch him in Sendhoorapandi, watch throwback video

அப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்று நடிகர் விஜய்யின் பழைய பேட்டியின் கிளிப்; தற்போது பெரிய ஸ்டாராக இருக்கும் நடிகர் விஜய், விஜயகாந்தின் செந்தூரபாண்டி (1993) படத்தில் துணை வேடத்தில் நடித்தார். விஜயகாந்துடன் பலப் படங்களில் பணியாற்றிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது, நடிகர் விஜய்யும் மக்கள் மத்தியில் பிரபலமடைய உதவியது.

குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜய், தனது தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, விஜய்யும் தனது தோற்றம் மற்றும் நடிப்புக்காக கசப்பான விமர்சனங்களைப் பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய்யை ஒரு பிரபலமான ஹீரோவுடன் நடிக்க வைக்க முடிவு செய்தார், மேலும் அப்போது அவருடன் அடிக்கடி இணைந்து பணியாற்றிய விஜயகாந்த் இந்த திட்டத்தைச் செய்ய ஒப்புக்கொண்டார். கேப்டன்’ விஜயகாந்த் இந்தப் படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார், படத்திற்கான கால்ஷீட்டிற்கு சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

வீடியோ கிளிப்பில், படத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை விஜய் பகிர்ந்து கொள்கிறார். "நம்மிடம் இரண்டு வகையான பார்வையாளர்கள் உள்ளனர்: கிளாஸான ரசிகர்கள் மற்றும் மாஸான ரசிகர்கள். ஒருவர் நடிகராக வரவேண்டும் என்றால் மாஸான ரசிகர்கள் அவரை நடிகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். அன்று முதல் இன்று வரை விஜயகாந்த் அண்ணா மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார். என் அப்பா அவரை ஒரு படத்தில் இயக்கியபோது, ​​அந்த படத்தில் என்னை தம்பியாக நடிக்க வைத்தார். அதனால், விஜயகாந்த் சாரைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்கிறார்கள், எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும். அதற்காகத்தான் நாங்கள் அந்த படத்தைப் பண்ணினோம், படம் வெற்றி பெற்றது, நாங்கள் செய்ய நினைத்தது எல்லாம் நடந்தது,” என்று விஜய் கூறியுள்ளார்.

71 வயதாகும் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், செவ்வாய் இரவு, அவர் மீண்டும் நிமோனியா பாதிப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். வியாழன் காலை விஜயகாந்த் மரணமடைந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Vijayakanth S A Chandrasekaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment