சாதி ஒழிப்பு: நடிகர் விஜய் நிகழ்த்திய இந்தப் ‘புரட்சி’ எத்தனை பேருக்கு தெரியும்?

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாதி ஒழிப்பு நடவடிக்கையில் தனது மகனும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் சாதி சான்றிதழில் செய்த புரட்சிகரமான செயல் பலருக்கும் வெளியே தெரியவந்துள்ளது.

SA chandrasekar open talks about Vijay caste certificate, Viay Caste, விஜய், எஸ் ஏ சந்திரசேகர், விஜய் சாதி சான்றிதழ், actor vijay, tamil nadu caste politics,SA Chandrasekar, Tamilnadu, Tamil cinema news

நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ‘சாயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இயக்குனர் அந்தோணிசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் விஷ்வா (முன்னர் அபி சரவணன் என்று பெயர் வைத்து இருந்தார்) நடித்துள்ள ‘சாயம்’ படத்தின் இசை வெளியீட்டு அண்மையில் நடைபெற்றது. இந்த படத்தில் விஜய் விஷ்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

‘சாயம்’ படத்தில் நடிகர்கள் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கவிஞர்கள் யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் மாணவன் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கைஎப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார்.

‘சாயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சி “மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் உண்மையாக என்ன செய்திருக்கிறோம். 40 வருடங்களுக்கு முன்பு என் மகனை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கூலில் சேர்க்க சென்றேன். அங்கேய அப்ளிகேஷன் கொடுத்தார்கள் அதில் Natinality என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டேன். ஏனென்றால் இந்தியாவில் பிறந்தவர் அதனால் இந்தியர் என்று போட்டேன். மதம் என்ற இடத்தில் தமிழன் என்று போட்டேன். ஜாதி என்ற இடத்தில் தமிழன் என்று போட்டேன். நீங்கள் தப்பாக போட்டு இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். எதுக்கு ஒரு 4 வயது பையனை பள்ளியில் சேர்க்கும் போதே அவர் இன்னார்தான் என்று முத்திரை குத்துரீங்க. அவன் தமிழனாக வளரட்டுமே என்றேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் அப்படியே சேர்த்தார்கள். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.” என்று கூறினார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாதி ஒழிப்பு நடவடிக்கையில் தனது மகனும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் சாதி சான்றிதழில் செய்த புரட்சிகரமான செயல் பலருக்கும் வெளியே தெரியவந்துள்ளது. விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ‘சாயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay father director sa chandrasekar open talks about actor vijay caste certificate

Next Story
எனது பிரச்னையை தீர்த்து வைத்தவர் ஜி.கே. மணி மகன்: வடிவேலு நெகிழ்ச்சி பேட்டிVadivelu Interview, actor vadivelu press, vadivelu says My problem solved by son of GK Mani, lyca, Vadivelu GK Mani, எனது பிரச்னையை தீர்த்து வைத்தவர் ஜி.கே. மணி மகன், வடிவேலு நெகிழ்ச்சி பேட்டி, வடிவேலு பிறந்தநாள், Tamil cinema news, vadivelu birthday, vadivelu birthday celbrations, vadivelu movie, vadivelu comedy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com