Advertisment

விஜய்யின் G.O.A.T படப்பிடிப்பு ராஜஸ்தான், இலங்கை, இஸ்தான்புல் 3 இடங்களில் நடத்த திட்டம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The G.O.A.T படத்தின் படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து, ராஜஸ்தான், இலங்கை, இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
goat

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The G.O.A.T படம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படமான 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். தாய்லாந்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இலங்கை, ராஜஸ்தான் மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களிலும் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். 'GOAT' மே 2024-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 என்று அறிவிக்கப்பட்ட G.O.A.T (The Greatest Of All Time) என்ற படத்தை விஜய் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் முதல் ஷெட்யூலுடன் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல் தற்போது சென்னையில் நடந்து வருகிறது, இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்புக்குப் பிறகு, படக்குழுவினர் படப்பிடுப்புக்காக இலங்கைக்குச் செல்ல உள்ளனர். அதைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரியில் ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து, குழு துருக்கியின் இஸ்தான்புல்லுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

விஜய்யின் 2024 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினர், 'GOAT' படத்தின் கதைக்களத்தை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தில், விஜய் உடன், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, ஜெயராம், பார்வதி நாயர், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, வைபவ் மற்றும் ஆகாஷ் அரவிந்த் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment