கோட் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த ரோகினி தியேட்டர்

டிக்கெட் உடன் ஸ்நாக்ஸ் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது, இரண்டும் சேர்த்து ரூ.390 என்று கூறப்படுகிறது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் உடன் ஸ்நாக்ஸ் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது, இரண்டும் சேர்த்து ரூ.390 என்று கூறப்படுகிறது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
goat rohini theatre

Vijay Goat Movie Ticket booking

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு, மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

Advertisment

செப்டம்பர் 5 ஆம் தேதி கோட் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று ஒரு சில திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்நாள் டிக்கெட்டின் விலை ரூ.390 என்று சென்னை ரோகினி  திரையரங்கம் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

டிக்கெட் உடன் ஸ்நாக்ஸ் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது, இரண்டும் சேர்த்து ரூ.390 என்று கூறப்படுகிறது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தன் X பக்கத்தில் கருத்து தெரிவித்த அமுதபாரதி என்பவர், ‘நாங்கள் திரைப்படம் பார்க்கதான் திரையரங்கிற்கு செல்கிறோம்.. ஆனால், ஸ்நாக்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் 4வது பாடல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: