இன்று தென்னிந்தியாவிலே’ அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உயர்ந்துள்ளார். ஆனால் இந்த இடம் ஒன்றும் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்துவிடவில்லை.. இன்று இளைய தளபதியாக ரசிகர்களின் மனதில் குடிக்கொண்டிருக்கும் விஜய்’ ஆரம்ப காலத்தில் நடித்த ஒரு சில படங்கள் பெரியளவு ஓடவில்லை. ஆனாலும், விஜய் விடவில்லை. தன் விடாமுயற்சியால், தன்னை நடனம், நடிப்பு அத்தனையிலும் மெருகேற்றி’ இன்று தமிழ் சினிமாவின் ஒரே இளைய தளபதியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி விஜய்யின் சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் தான்’ துள்ளாத மனமும் துள்ளும். இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனபோதிலும், இப்போதும் டிவியில் எத்தனை முறை போட்டாலும் விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிதான் விஜய் மற்றும் சிம்ரனை தமிழ் சினிமாவின் வெற்றி ஜோடிகளில் ஒன்றாக மாற்றியது.
துள்ளாத மனமும் துள்ளும் படம்’ கேரளாவில் விஜய்யின் படங்களுக்கென ஒரு’ மார்க்கெட்டை திறந்து வைத்தது. இந்த படம் பார்த்த நிறைய கேரள இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக மாறினர். இப்படம் அம்மாநிலத்தில் 5-6 திரைகளில் வெள்ளி விழாவைக் கொண்டாடியது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த படத்தின் இடையில் வரும் மணிக்கூண்டு காமெடி சீனை இப்போது பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிப்பு வரும்.
இந்த காமெடியில்’ மணிக்கூண்டுக்கு எப்படி போனும் என கேட்பவரிடம்’ டெளசர் பாண்டி’ ரோட்டிலேயே மேப் வரைந்து’ போக வேண்டிய இடத்தை சொல்லி, கடைசியில நீ கேட்ட மணிக்கூண்டு இங்கேத்தான் இருக்குனு சொல்வார். இந்த காமெடி அப்போது செம ஹிட். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் பிடித்த காமெடி இது.
அந்த டெளசர் பாண்டி கேரெக்டரில் நடித்தவர் தான்,காமெடி நடிகர் பாரி வெங்கட். பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அப்படி ’திருநெல்வேலி’ படத்தில் நடித்து’ ஷூட்டிங் முடிந்து திரும்பியவர் ஒரு வாரமாக வீட்டுக்கு போகவில்லை. இதையறிந்த சக காமெடியன்கள்’ அவரை தேடியுள்ளனர். அப்போதுதான் ஷூட்டிங் முடிந்து திரும்பும் போது’ பெரம்பலூர் அருகில்’ நடந்த விபத்தில் பாரி இறந்த தகவல் கிடைக்க’ சக காமெடி நடிகர்கள் சேர்ந்து’ அவருடைய உடலை மீட்டு’ சென்னையில் முறைப்படி சடங்குகள் செய்து இறுதி மரியாதை செய்துள்ளனர்.
பாரி வெங்கட் இறந்த செய்தி விஜய்க்கு தெரியவர, உடனே’ விஜயும், அவருடைய அப்பாவும்’ டி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று’ பாரி மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துட்டு, அஞ்சலி செலுத்தி விட்டு சென்றுள்ளனர்.
காமெடி நடிகர் காகா கோபால்’ விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இந்த தகவலை கூறியுள்ளார்.
ஒருமுறை தாடி பாலாஜி, விஜய் டிவி ஷோவில்’ தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதபோது, விஜய் தெரிந்து கொண்டு’ மருத்துவமனைக்கு வந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்துச் சென்றதை கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“