'ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது…' விஜய் லேட்டஸ்ட் ப்ரோமோ

நடிகர் விஜய் பத்தாண்டுகளுக்கு பிறகு, பீஸ்ட் படத்திற்காக அளித்துள்ள பேட்டி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், பேட்டியில் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் பத்தாண்டுகளுக்கு பிறகு, பீஸ்ட் படத்திற்காக அளித்துள்ள பேட்டி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், பேட்டியில் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay interview latest promo, Vijay and Nelson interview latest promo, Vijay Beast interview, விஜய் பீஸ்ட், விஜய் நேருக்கு நேர், விஜய் பேட்டி லேட்டஸ்ட் ப்ரோமோ, விஜய் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை, Vijay interview promo, vijay advice to fans in sun tv, sun tv, sun tv nerukku ner

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய் பத்தாண்டுகளுக்குப் பிறகு ’பீஸ்ட்’ படத்திற்காக சன் டிவியில் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி வரும் ஏப். 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment

விஜயின் இந்த பேட்டி குறித்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி விஜய் பேட்டி மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் பேட்டி பற்ரி தற்போது வெளியான புதிய புரமோ வீடியோவில் விஜய் இயக்குனர் நெல்சனின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இந்த ப்ரோமோவில், 10 ஆண்டுகள் நீங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கா? என்று இயக்குனர் நெல்சன் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் அளிக்கும் விஜய், ‘ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது’ என்று அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறுகிறார்.

இதையடுத்து, நெல்சன், நீங்கள் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு விஜய், ‘அட்வைஸ் பண்ணும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று சொல்லி நான் எஸ்கேப் ஆக விரும்பவில்லை’ என்று கூறி, எனது ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னன்னா என்று அறிவுரை கூறுகிறார்.

Advertisment
Advertisements

நடிகர் விஜய் பத்தாண்டுகளுக்கு பிறகு, பீஸ்ட் படத்திற்காக அளித்துள்ள பேட்டி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், பேட்டியில் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sun Tv Beastmode Tamil Cinema Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: