தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனர் நடிகர் தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில், விஜய்யின் பேச்சுத்திறனைப் பாராட்டியதோடு, அரசியலில் விஜய் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கக் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவருடைய கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி பங்கேற்கவில்லை, ஆனால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்கும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, எந்தக் கட்சியிலும் செல்லப் போவதில்லை. பொது மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். அப்போதிருந்து, தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து விஜய் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். மேலும், விஜய் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) குறித்து கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சூழலில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சி.ஏ.ஏ) போன்ற எந்த சட்டத்தையும் அமல்படுத்துவதை ஏற்க முடியாது” என்று நடிகர் விஜய் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “இந்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருப்பதைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்” என விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி, 2026-ம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனர் நடிகர் தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகர் விஜய் குறித்து கூறியிருப்பதாவது: “அவரது ஆடியோ வெளியீட்டு உரைகளில் சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பேச்சாளர், அதுதான் ஒரு தலைவருக்கு முதல் தகுதி என்று நான் நினைக்கிறேன். மக்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தொடர்புகொண்டு புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் பார்வையைத் தெரிவிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள உலகத்தில் மிகச்சிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் அவருக்கு ஒரு சிறந்த முனைப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நல்ல பேச்சாளர்... விஜய் என்ன செய்யப்போகிறார் பார்க்க காத்திருக்கிறேன் - விஜய் தேவரகொண்டா கருத்து
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில், விஜய்யின் பேச்சுத்திறனைப் பாராட்டியதோடு, அரசியலில் விஜய் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கக் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Follow Us
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனர் நடிகர் தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில், விஜய்யின் பேச்சுத்திறனைப் பாராட்டியதோடு, அரசியலில் விஜய் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கக் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவருடைய கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி பங்கேற்கவில்லை, ஆனால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்கும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, எந்தக் கட்சியிலும் செல்லப் போவதில்லை. பொது மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். அப்போதிருந்து, தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து விஜய் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். மேலும், விஜய் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) குறித்து கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சூழலில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சி.ஏ.ஏ) போன்ற எந்த சட்டத்தையும் அமல்படுத்துவதை ஏற்க முடியாது” என்று நடிகர் விஜய் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “இந்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருப்பதைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்” என விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி, 2026-ம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனர் நடிகர் தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகர் விஜய் குறித்து கூறியிருப்பதாவது: “அவரது ஆடியோ வெளியீட்டு உரைகளில் சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பேச்சாளர், அதுதான் ஒரு தலைவருக்கு முதல் தகுதி என்று நான் நினைக்கிறேன். மக்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தொடர்புகொண்டு புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் பார்வையைத் தெரிவிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள உலகத்தில் மிகச்சிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் அவருக்கு ஒரு சிறந்த முனைப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.