Advertisment

கைதி மற்றும் விக்ரம் தயாரிப்பாளர்களுடன் என்.ஓ.சி பெற்ற லியோ படக்குழு : எல்.சி.யூ கன்ஃபார்ம்?

சமீபத்தில் ஒரு நேர்காணலில், லியோ எல்.சி.யூ-ன் ஒரு பகுதியாக இருக்குமா இல்லையா என்பதை இப்போது கூற முடியாது என்று லோகேஷ் கனகராஜ், கூறியிருந்தார்

author-image
WebDesk
New Update
Leo LCU

லியோ லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸின் ஒரு பகுதி

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் வரிசையில் ஒரு படமாக இருக்குமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு நடிகராக வலம் வரும் இவர் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 19-ந் தேி லியோ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

லியோ படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது வெளியான அப்டேட்கள் பாடல்கள் இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த வாரம் வெளியான லியோ படத்தின் டிரெய்லர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல், லியோ படம் எல்.சி.யூ வரிசையில் வருமா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்து வருகிறது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் இருவரும் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படம் எல்.சி.யூ வரிசையில் இருக்குமா அல்லது முற்றிலும் வேறு படமா என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கிவிட்டது. லோகேஷ் கனகராஜூவின் முந்தைய படமாக விக்ரம் படத்தின் இறுதியில், கைதி படத்தில் இருந்து சில கேரக்டர்கள் இருக்கும் அந்த வரிசையில் தற்போது லியோ படமும் இருக்கும் என்று சமீபத்திய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது!

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, லியோ தயாரிப்பாளர்கள் சமீபத்தில் கைதி மற்றும் விக்ரம் தயாரிப்பாளர்களை சந்தித்து தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விக்ரம் ரிலீஸுக்கு முன்னதாக, கைதி படத்தின் உடைகள் மற்றும் பிற கூறுகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் இருந்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ஓசி (NOC) வாங்கியுள்ளது. இதேபோல், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் விக்ரம் மற்றும் கைதி தயாரிப்பாளர்களிடமிருந்து என்ஓசி - ஐப் பெற்றுள்ளது.

அதிலும், சமீபத்தில் கலாட்டா பிளஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், லோகேஷிடம் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னால சொல்ல முடியாது சார். ஏனென்றால் அது சஸ்பென்ஸை கெடுத்துவிடும். என்று கூறியிருந்தார்.

விக்ரம் மற்றும் கைதியைப் போலவே லியோ படத்தின் கலர் மற்றும் காட்சிகள் தட்டும் இருப்பதால் இந்த படமும் யூனிவர்ஸின் ஒரு பகுதி என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் இதில் விக்ரம், கைதி மற்றும் லியோ ஆகியோர் எப்படி இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் அறிவதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். அதேபோல் இந்த 3 படங்களின் நடிகர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா என்பது குறித்து பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment