Advertisment

7 நாளில் ரூ 461 கோடி வசூல்; லியோ புதிய சாதனை: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

7 நாட்களில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ’லியோ’ சாதனை; ரூ. 461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Leo Vijay Box

7 நாட்களில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ’லியோ’ சாதனை; ரூ. 461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.461 கோடி வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளிவந்த லியோ படத்தில் விஜய் உடன் 15 வருட இடைவெளிக்குப் பின் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்தை தயாரித்தார்.

படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே வசூலை வாரிக் குவித்தது. மேலும் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் எந்த தொய்வும் இல்லை. வெளியான 4 நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடியை லியோ படம் வசூலித்தது.

இந்நிலையில், படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் இதுவரை ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலை லியோ’ படம் ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

மேலும், ரூ.250-350 கோடி பட்ஜெட்டுக்குள் உருவானதாகக் கூறப்படும் இப்படம் முதல் வாரத்தில் பட்ஜெட்டைத்தாண்டி வசூலித்துள்ளது. தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் அடுத்து ரிலீஸ் இல்லை என்பதால், ரஜினியின் ஜெயிலர்படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.600 கோடியை லியோநெருங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment