விஜய்யை மாதிரியே தோற்றம் கொண்ட மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், ‘லியோ’ படத்தில் விஜய் உடன் நடிக்கும் சூப்பர் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
உலகத்தில் ஒரே மாதிரியான தோற்றத்துடன் 7 பேர் இருப்பார்கள் என்ற ஒரு பழைய பேச்சுவழக்கை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், மற்ற அந்த 6 பேர் எங்கே தான் இருக்கிறார்கள் என நீங்கள் கேட்டிருக்கலாம். அதையெல்லாம், தாண்டி உங்களுக்கு தெரிந்த ஒருவரைப் போல உருவ ஒற்றுமை கொண்ட மற்றொருவரைப் பார்க்கும்போது ஆச்சரியப்படுவீர்கள். அதுவே ஒரு பிரபலமான நடிகரைப் போல, ஒரே மாதிரியான தோற்றம் இருந்தால் எப்படி இருக்கும் பாருங்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் லியோ படத்தை முதல் நாள் முதல் காட்சியைக் காண ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில், விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தைப் பற்றிய செய்திகள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் நிரம்பி வழிகிறது. அந்த வகையில், விஜய் மாதிரியே தோற்றம் கொண்ட மலையாள நடிகர் ‘லியோ’ படத்தில் விஜய் உடன் நடித்திருக்கும் சுவாரசியமான செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தளபதி விஜய்யின் டீனேஜ் வெர்ஷன் போல இருக்கும், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் அசல் விஜய் மாதிரியே இருக்கிறார். இவர் கும்பலாங்கி இரவுகள் படத்தில் நடித்தபோதே மக்கள் என்ன இவர் விஜய் மாதிரியே இருக்கிறார் என்று கவனிக்கத் தொடங்கினார். இதில் ஆச்சரியமும் சுவாரசியமும் என்னவென்றால், மேத்யூவின் பெரும்பாலான படங்களில் விஜய் அல்லது அவரது படங்கள் பற்றிய காட்சியோ வசனமோ இடம்பெற்றிருக்கும். இதைப் பார்த்த ரசிகர்கள் மீம்ஸ், ட்ரோல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், விஜய்யை மாதிரியே தோற்றம் கொண்ட மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், ‘லியோ’ படத்தில் விஜய் உடன் நடிக்கும் சூப்பர் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
விஜய் மாதிரியே தோற்றம் கொண்ட மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ள லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் மேத்யூ தாமஸ் தனது முதல் தமிழ் படத்தில் விஜய்யின் மகனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேத்யூ தாமஸ் ‘லியோ’ படத்தில் விஜய் உடன் நடித்திருக்கும் செய்தி வெளியானபோதும், படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாததால் மேத்யூ தாமஸ் தனது கதாபாத்திரம் குறித்து எதுவும் பகிர்ந்துகொள்ள்வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“