விஜய் நடிப்பில் வெளி வரவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.
'லியோ' படத்தில் விஜய்யின் டான்ஸ் நம்பர் பாடலின் தொடக்கமாக 'நான் ரெடி' என்ற வார்த்தையை எப்படிக் கொண்டு வந்தேன் என்று பாடலாசிரியர் விஷ்ணு எடவன் மனம் திறந்து பேசினார்.
உள்ளூர் ஊடகமொன்றில் பேசிய பாடலாசிரியர் விஷ்ணு, பாடலின் தொடக்கத்திற்கு 'நான் ரெடி' தவிர வேறு வார்த்தை இருந்ததாகக் கூறினார், ஆனால் இதுதான் மிகவும் பொருத்தமாக இருந்தது.
ஒரு பாடலின் முதல் வரி மிகவும் முக்கியமானது, அது கதாபாத்திரம் என்ன சொல்ல வருகிறது என்பதைக் குறிக்கும், மேலும் 'லியோ' படத்தில் வரும் விஜய் கேரெக்டருக்கு 'நான் ரெடி' என்பது பொருத்தமான வார்த்தையாக உணர்ந்ததாக விஷ்ணு கூறினார்.
1000 க்கும் மேற்பட்ட பின்னணி நடனக் கலைஞர்களைக் கொண்ட இந்தப் பாடலை விஜய் பாடுவார் என்று, எனக்குத் தெரிவிக்கப்பட்டது
பாடல் படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் நான் ரெடி, டான்ஸ் ஷூட் தொடங்கலாமா என்று கேட்பார். அதனால்தான் பாடல் வரிகளில் 'நான் ரெடி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக உணர்ந்ததாக விஷ்ணு கூறினார்.
லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil