விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன்கள் விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. இந்தநிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, சென்னையில் அல்லாமல் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இணைந்துள்ளதால், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராக உள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஏற்கனவே 3 பாடல் வெளியிடப்பட்டு, பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையில், 'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களால் சென்னையில் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு துபாய் செல்ல உள்ளது. அதற்கு முன்னதாக, ஹைதராபாத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக அறிக்கைகளின்படி, 'லியோ' பட நடிகர்கள் மற்றும் குழுவினர் இந்த வார இறுதியில் ஹைதராபாத்தில் நடைபெறும் ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்துகொள்வார்கள், மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மேடையில் நேரடியாக நிகழ்ச்சி நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சி தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில், தசரா விடுமுறை என்பதால், அக்டோபர் 19 முதல் அக்டோபர் 24 வரை லியோ படத்திற்கு கூடுதல் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது அடுத்த 'தளபதி 68' படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். விஜய், மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கி, முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“