Advertisment

ஜெயிலர் சாதனை தூள்: வட அமெரிக்காவில் 1000 இடங்களில் லியோ; பெரும் தொகையில் பிரீமியர் கலெக்ஷன்

வெளியாவதற்கு முன்னே வசூலை வாரிக் குவிக்கும் லியோ; விஜய் படத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்தில் செம வரவேற்பு; ஜெயிலர், பதான் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்து சாதனை

author-image
WebDesk
New Update
leo jailer

வெளியாவதற்கு முன்னே வசூலை வாரிக் குவிக்கும் லியோ; விஜய் படத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்தில் செம வரவேற்பு; ஜெயிலர், பதான் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்து சாதனை

'லியோ' படம் வட அமெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியிடப்படும் நிலையில், இது அங்கு அதிக இடங்களில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படமாக மாறியுள்ளது. இப்படியாக, விஜய்யின் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வசூல் சாதனை படைத்தது.

Advertisment

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் லியோ படம் உருவாகியுள்ளதால், படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் உடன் 15 வருட இடைவெளிக்குப் பின் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம், அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது.

'லியோ' திரைப்படம் பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீட்டை நெருங்கி வருகிறது, மேலும் படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவிலும் பிற வெளிநாடுகளிலும் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. 'லியோ' படம் வட அமெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியிடப்படுகிறது, இது அங்கு அதிக இடங்களில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படமாக மாறியுள்ளது. இப்படியாக, விஜய்யின் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வசூல் சாதனை படைத்து வருகிறது, என TOI செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க (USA) பிரீமியர் விற்பனையில் 544 இடங்களில் 'லியோ' $832,689 வசூலித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் 340 இடங்களில் வெளியாகி $802,628 வசூல் ஈட்டிய ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை முந்தியதால், விஜய்யின் லியோ படம் 2023 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பிரீமியரில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியுள்ளது.

அபரிமிதமான வரவேற்புடன், 'லியோ' படம் விரைவில் $1 மில்லியனை எட்ட உள்ளது, மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் USA பிரீமியர்ஸில் விஜய்க்கு முதல் ஒரு மில்லியன் வசூல் ஈட்டும் படமாக இருக்கப்போகிறது. அமெரிக்க பிரீமியரில் விஜய்யின் முந்தைய பெஸ்ட் 2022ல் வெளியான 'பீஸ்ட்' படமாகும், நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் அமெரிக்க பிரீமியர்களில் இருந்து சுமார் $660K வசூல் செய்தது.

அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்தில் முதல் நாள் வசூல் செய்த இந்தியப் படமாகவும் 'லியோ' உருவெடுத்துள்ளது, மேலும் இப்படம் இதுவரை £340K வசூலித்துள்ளது. இங்கிலாந்தில் ஷாருக்கானின் 'பதான்' படத்தின் (£319K) முதல் நாள் வசூலை 'லியோ' முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் லியோ படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக் குவிக்க தொடங்கியுள்ளது, மேலும் படம் வெளியான பிறகு பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

மேலும் லியோ படம் இந்திய அளவில் வெளியாகும் வகையில் பல மொழிகளில் வெளியாகிறது. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் படத்திற்கான முன்பதிவு இன்னும் திறக்கப்படவில்லை, இதற்கிடையில், ரசிகர்கள் படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க தயாராகி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Lokesh Kanagaraj America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment