New Update
/indian-express-tamil/media/media_files/85n8ls5o0xmWRRa9U0l7.jpg)
விஜயின் லியோ படத்திற்காக சிக்ஸ்பேக் கெட்டப்பில் சாண்டி மாஸ்டர்; இணையத்தில் தெறிக்கும் வைரல் புகைப்படம்
விஜயின் லியோ படத்திற்காக சிக்ஸ்பேக் கெட்டப்பில் சாண்டி மாஸ்டர்; இணையத்தில் தெறிக்கும் வைரல் புகைப்படம்
விஜய்யின் ‘லியோ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், தனது உடலை கடுமையாக செதுக்கி சிக்ஸ்பேக்கிற்கு மாறியுள்ளார். லியோ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சாண்டியின் இந்த சிக்ஸ்பேக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாண்டி. பின்னர் தனது நடனத் திறமையால் விரைவாக வளர்ச்சி பெற்றவர், விஜய் டிவியின் டான்ஸ் ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார். பின்னர் காலா, வாலு, சாகசம், ஜித்தன் 2 முதல் பல்வேறு படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் கலந்துக் கொண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், நடிகராகவும் மாறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் சாண்டியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுவாரஸ்யமாக, சாண்டி இப்போது 'லியோ' படத்திற்காக தனது அற்புதமான உடல் மாற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு சட்டை இல்லாத படத்தைப் பகிர்ந்துள்ளார். படத்தைப் பகிர்ந்த சாண்டி, "அமைதியாக இருங்கள் & லோகேஷ் கனகராஜின் மேஜிக்கை பார்க்க காத்திருங்கள் !!!” என்று பதிவிட்டுள்ளார்.
லியோ படம் இன்னும் ஒரு மாதத்திற்குள் திரைக்கு வர உள்ள நிலையில், சாண்டியின் படம் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பில் உள்ள படத்தில் ஆச்சரியமான அம்சங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பான்-இந்தியா படமான லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு நேர்காணலில், படத்தில் தளபதி விஜய்யுடன் காம்பினேஷன் காட்சிகள் இருப்பதாகவும் சாண்டி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.