scorecardresearch

தளபதி 67 புதிய படத் தலைப்பு ‘லியோ’: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் -லோகேஷ் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 67 புதிய படத் தலைப்பு ‘லியோ’: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் முதல் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் லோகேஷ் கடைசியாக இயக்கிய கமலின் விக்ரம் படம் பெரிய வசூல் சாதனை செய்ததை தொடர்ந்து தளபதி 67 படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு பட வெளியீட்டிற்காக தளபதி 67 படத்தின் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்த படக்குழு தற்போது அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும் நடிகர் விபரம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது.

விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். குருவி, கில்லி, திருப்பாச்சி மற்றும் ஆதி ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள ஐந்தாவது படம் இது. மேலும் சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் சர்ஜா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியதாகப் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தளபதி 67 படத்தின் டைட்டில் இன்று (பிப்ரவரி 3) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தளபதி 67 படத்தின் ப்ரமோவுடன் டை்டில் வெளியிடப்பட்டுள்ளது. சாக்லேட் பேக்ட்ரியில் ஆயுதம் ரெடி பண்ணுவது போன்று வரும் விஜய் இறுதியில் தனது பேக்ட்ரி வாசலில் வந்து நிற்கும் எதிரிகளை எதிர்கொள்ள தயாராகிறார். அதன்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay lokesh kanagaraj movie thalapathy 67 title release feb 3

Best of Express