/indian-express-tamil/media/media_files/4tJ1HWZomcDr5peLsDza.jpg)
தளபதி விஜய் - புஸ்ஸி ஆனந்த்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமீப காலமாக தனது அரசியல் என்ட்ரிக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வந்தார். ஏற்கனவே மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாச்சி தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இதனிடையே அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் அல்லது தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூரில், 3-வது ஆண்டாக தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும். அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கம் தொடங்கப்படும்.
விஜய் சொல்லுங்க இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என்ன பிரச்சனை வந்தாலும் அரசியல் என்ட்ரி என்பது விஜய் முடிவு தான். விரைவில் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், விலையில்லா உணவகத்தை தொடர்ந்து தற்போது தொழிற்சங்கமும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.