விஜயின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு; டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மகிழ்ச்சியைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

thalapathy vijay, master release, Master ott platform
thalapathy vijay, master release, Master ott platform

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மகிழ்ச்சியைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில், விஜய் உடன் நடிகர் விஜய் சேதுபதி, விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை எக்ஸ் பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தி படப்பிடிப்பு நடந்தபோது வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த விஜய்யை வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாடலைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறை சோதனை, அங்கே பாஜகவினர் நடத்திய போராட்டம் போன்றவை குறித்து இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஸ்டர் இசைவெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #MasterAudioLaunch என்று பதிவிட்டு டிரெண்ட் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay master audio launch date announced sun tv broadcast audio launch function

Next Story
Sun TV Serial: குழந்தைன்னு வரும்போது, ஈகோவ விட்டுக் கொடுத்துடுறாங்கப்பாChandralekha Serial, Sun tv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com