ஜனவரி, 13ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் : படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vijay Master Movie will release on January 13, 2021 :

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13, 2021 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.

இது தொடர்பாக மாஸ்டர் படக்குழு இன்று வெளியிட்ட பிரத்யேக போஸ்டரில்,” ஜனவரி 13 அன்று தமிழ், தெலுங்கு  மொழிகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்றும்,    ஜனவரி 14 அன்று ‘விஜய் தி மாஸ்டர்’ என்று இந்தி மொழியில் திரைப்படம் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

முன்னதாக, திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகுவது தொடர்பாக நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய நிலையில், மாஸ்டர் வெளியீட்டுத் தேதி இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு 100% இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, கோவிட் கண்காணிப்புக்கு நவமபர் 25ம் தேதி பிறப்பித்த வழிகாட்டுதல்களை, 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம்  நேற்று உத்தரவு பிறப்பித்தது.  50 சதவீதம் கொள்ளளவுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் என நவம்பர் 25ம் தேதி வெளியிட்ட வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும்  மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா எரேமியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மற்றும் ஜி கிஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay master movie release date announced vijay 2021 masterpongal 13th jan

Next Story
பிக்பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத்தின் தந்தை மரணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express