/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-23T171246.534.jpg)
thalapathy vijay, master second single, vaathi is coming
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2வது சிங்கிள் டிராக் இன்று மாளை 5 மணிக்கு வெளியாகிறது என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரென்ட் செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் 2வது சிங்கிள் டிராக்கிற்காக காத்திருக்கின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படம் கர்நாடகாவில் உள்ள ஷிவமோகா, தமிழகத்தில் நெய்வேலி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் உடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘லெட் மி சிங் ய குட்டி ஸ்டோர்’ என்ற சிங்கிள் டிராக் பாடல் காதலர் தினம் அன்று வெளியாகி வைரலானது. விஜய் பாடியிருந்த இந்த பாடல் இணையத்தில் 13 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சென்றுகொண்டுள்ளது.
https://twitter.com/hashtag/Master?src=hash&ref_src=twsrc%5Etfw">#Master Second Single Track Update
— S.Damo Vijay (@DamoVijay) https://twitter.com/DamoVijay/status/1231449168947941377">February 23, 2020
Today At 5Pm ????
Enna Nanba Ready Ya ????https://twitter.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay https://twitter.com/hashtag/MasterSecondSingle?src=hash&ref_src=twsrc%5Etfw">#MasterSecondSingle https://t.co/aJoMknF8jM">pic.twitter.com/aJoMknF8jM
இதையடுத்து, விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து 2வது சிங்கிள் டிராக் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால், விஜய் ரசிகர்கள் மாஸ்டர் 2வது சிங்கிள் டிராக் வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.