/tamil-ie/media/media_files/uploads/2020/12/master-movie.jpg)
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தளபதி விஜய்யின் மாஸ்டர். இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த டிசம்பர் 13 இரவு மாஸ்டர் பட குழுவினருக்காக திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா எரேமியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மற்றும் ஜி கிஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாஸ்டர் படம் வரும் 2021 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் இன்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமைக்குள் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ம் தேதி வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 1 நிமிடம் -30 விநாடிகள் கொண்ட இந்த டீசரில், தளபதி விஜய், விஜய் சேதுபதியை எதிர்கொள்ளும் ஆக்ஷன் அதிரடி காட்சி காட்டப்பட்டது.
பொங்கல் தினத்தில் திரையில் வெளியிடப்படும் இந்த படம், அதன் பின்னர் OTT இல் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில், திரைப்படத்தின் தயாரிப்பாளர், எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ், வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புகழ்பெற்ற OTT இணையதளம் எங்களுக்கு சலுகை இருந்தாலும், நாங்கள் இந்த படத்தை திரையில் வெளியிடவே விரும்புகிறோம். தியேட்டர் உரிமையாளர்கள் எங்களுடன் நின்று தமிழ் திரையுலகத்தை புத்துயிர் பெறுவதற்கு அவர்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நல்ல செய்தியுடன் விரைவில் உங்களை அணுகுவோம் என்று நம்புகிறோம். பாதுகாப்பாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.