விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததால், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், விஜய் ரசிகர்கள் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், கொரோன வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்க அறிவிக்கப்படுவதற்கு முன்பே, படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. மாஸ்டர் படத்தின் ஆடியோவும் வெளியிடப்பட்டது. பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக திரையரங்குகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்கள் இருக்க வேண்டும். நிலையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
திரையரங்குகள் திறக்கப்பட்டதால், மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் மாஸ்டர் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடித்து தயாரித்த சூரரைப் போற்று திரைப்படம், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. பெரிய நடிகரின் படங்கள் ஓடிடியில் வெளியாவதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால், விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் சிறு ஏமாற்றமாக இருந்தாலும் விஜய்யின் மாஸ்டர படத்தை ஒடிடியில் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் இருந்தனர்.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேஷன்ஸ், மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். ஓடிடியில் வெளியாகாது என்று அறிவித்தது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திரையரங்குகளில்தான் ரசிகர்கள் கூட்டமாக சினிமா பார்ப்பதை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாற்றுகிறது. சினிமா தியேட்டர்கள்தான் சினிமா கலை வளர்ச்சிக்கும் சினிமா சார்ந்த தொழிலாளர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். ஒடிடியில் திரைப்படங்கள் வெளியாவது சினிமாவின் வளர்ச்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்று சினிமா ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதனால், மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்ற அறிவிப்பை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனங்களும், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் வரவேற்றுள்ளனர்.
கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்கு மாஸ்டர் போன்ற ஒரு பெரிய ஹீரோ நடிகரின் பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியாவது அவசியம் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The Industry definitely needs a blockbuster film to come to the Theater. We are struggling and that is the truth. As a multiplex operator / Distributor / Producer we stand by our #Thalapathy and you. @XBFilmCreators #Master @Jagadishbliss @agscinemas pic.twitter.com/ppUSKo6LfG
— Archana Kalpathi (@archanakalpathi) November 28, 2020
மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு, விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி, “சினிமா துறைக்கு நிச்சயமாக ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் தியேட்டருக்கு வருவது அவசியம். நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நம்முடைய தளபதிக்காக நிற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
#Master coming soon in #Theatres near you!! They call him #Master for a reason!!
Thanks to the entire team for this decision. #Koluthungada ???????? https://t.co/bDNsLjWj2c
— Ruban Mathivanan (@GKcinemas) November 28, 2020
ஜி.கே. சினிமாஸ் போரூர், ரூபன் மதிவாணன், “உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் விரைவில் மாஸ்டர் திரைபடம் வருகிறது. அதனால்தான் அவர்கள் அவரை மாஸ்டர் என்று அழைக்கிறார்கள். இந்த முடிவுக்காக மொத்த குழுவுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்து விஜய்யையும் தயாரிப்பு நிறுவனத்தையும் பாராட்டி வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.