நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது.
மாஸ்டர் படத்தில் விஜய் உடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் ஆடியோ பொது முடக்கத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது. ஆனால், படக்குழுவினர் டீஸர் எதுவும் வெளியிட வில்லை.
அண்மையில், தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. அதனால், விஜயின் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் பொங்கல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படக்குழுவினர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் வகையில், தீபாவளி அன்று டீஸரை வெளியிட முடிவு செய்து அறிவித்தது.
அதன்படி, ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அதோடு, திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக, மாஸ்டர் டீஸர் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
மாஸ்டர் டீசர் மாலை 6 மணிக்கு சன் டிவியின் யூடியூப் தளத்திலும், 6.30 மணி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி திரையரங்குகளிலும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijay master teaser will be screened at theatre
திருமணம் செய்து கொள்கிறாயா? சிறுமியை பலாத்காரம் செய்தவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!
Tamil News Today Live : காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்
இந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு… நல்ல வருவாய்..! 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ
30 வருட தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த தொகுதிகளில் பா.ம.க: உத்தேச தொகுதிகள் எவை?
டிஜிபாக்ஸ் முதல் அமேசான் வரை… இலவசமாக போட்டோ சேமிக்க இவ்ளோ ஆப்ஷனா?