/indian-express-tamil/media/media_files/c9ecdWXtmQekYVwn5TQy.jpg)
கேரளாவில் விஜய்
கோட் படத்தின் படப்பிடிப்புக்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய், லியோ படத்திற்கு பின் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் மைக் மோகன் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.
கோட் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்புக்காக விஜய் கேரளா மாநிலம் சென்றுள்ளார். இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்த்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் வாகனத்தை சுற்றி வளைத்த மக்கள் கூட்டம் காரணமாக விஜய் பயணம் செய்த கார் சேதமடைந்து காணப்பட்டது. தற்போது, விஜய் தனது ரசிகர்களை ஒரு மைதானத்திற்கு வெளியே சந்தித்துள்ளார்.
மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்துக்குள் நுழையும் முன், விஜய் வாகனத்தின் மேல் ஏறி நின்று கூட்டத்தை கை அசைத்து ரசிகர்களை சந்தித்தார். எப்போதும் போல, அவர் அவர்களுடன் ஒரு செல்ஃபி கிளிக் செய்தார், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Full Drone Footage Video🔥
— ʀᴀᴊᴀ❗ᴳᴼᴬᵀ 🐐 (@itz_Esakkiraja) March 19, 2024
Demigod @actorvijay 🙏🥶 Craze Fanbase range eh Vera 🔥🔥🔥
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை.! 😍❤️ #Vijay#TheGreatestOfAllTime#TheGOAT#Thalapathy#ThalapathyVijay#KeralaVijayFans#VijayRulingHeartsofKeralapic.twitter.com/Y0HOipjW7K
இந்த நிகழ்விற்குப் பிறகு, விஜய் வெங்கட் பிரபுவுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார், இது எல்லா நேரத்திலும் மிகச்சிறந்தது. முழுநேர அரசியல் வாழ்க்கையைத் தொடங்கவுள்ள விஜய்யின் கடைசி முயற்சியாக இப்படம் இருப்பதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.