scorecardresearch

விஜய்யின் ’லக்ஷ்மி’ யார்?. பிரபலங்கள் வெளியிட்ட தகவல்கள்!

வெற்றி தோல்வி இரண்டும் ஒன்று என்று ட்வீட் செய்துள்ளா

விஜய்யின் ’லக்ஷ்மி’ யார்?. பிரபலங்கள் வெளியிட்ட தகவல்கள்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ’லக்ஷ்மி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

இயக்குனர் விஜய், பிரபுதேவா, தித்யா பாந்தே, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ’லக்ஷ்மி. பிரபுதேவா- விஜய் கூட்டணியில் சென்ற வருடன் வெளியான தேவி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து விஜய் மீண்டும் பிரபுதேவாவுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

டான்ஸ் குறித்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்படட்டுள்ள இந்த படத்தில் ‘சூப்பர் டான்ஸர் 2016’ ரியாலிட்டி ஷோவின் வின்னரான தித்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரையில் இசை மற்றும் நடன விருந்து கொடுக்க காத்திருக்கும் லக்ஷ்மி படம் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பு கிளம்ப நடிகர் தனுஷ், வெங்கட் பிரபு, சித்தார்த் ஆகியோரும் முக்கிய காரணம்.

இந்த படத்தின் ட்ரெய்லரை வெளிட்டவர் நடிகர் தனுஷ்.

இந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் இறைவா… இறைவா… பாடலை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டார். அதே போல் லக்ஷ்மி படத்தில் வரும் நில்லாதே நில்லாதே எனும் பாடலை நடிகர் சித்தார்த் வெளியிட்டு, வெற்றி தோல்வி இரண்டும் ஒன்று என்று ட்வீட் செய்துள்ளார்.

லக்ஷ்மி படத்திற்கு பிரபலங்கள் மாறி மாறி ட்வீட் செய்த ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay movie lakshmi

Best of Express