சென்னை திருவான்மியூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி விருது மற்றும் 10, 12-ம் வகுப்பில் மாநிலம் மாற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா இரண்டாவது கட்டமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் மேடைக்கு, திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி கையில் குழந்தையுடன் வந்து தங்களது 3 மாத பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி விஜய்யிடம் கேட்டுக்கொண்டனர்.
பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்ற த.வெ.க தலைவர் விஜய், அந்த குழந்தைக்கு ‘தமிழரசி’ என பெயர் சூட்டினார்.
மாணவர்களுக்கு கல்வி விருது வழங்குதல் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் 3 மாத பெண் குழந்தைக்கு விஜய் பெயர் வைக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று விஜய் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் கையால் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காகவே தங்கள் மகளுக்கு பெயர் சூட்டாமல் காத்திருந்தோம், குழந்தைக்கு தமிழரசி என்று பெயர் வைத்துள்ளார், த.வெ.க தலைவர் விஜய் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உழைப்போம் என்று அந்த குழந்தையின் தந்தை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“