/tamil-ie/media/media_files/uploads/2022/04/Rashmika-Mandanna.jpg)
நடிகர் அல்லு அர்ஜுன் தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். இந்த நிலையில், அவருடன் புஷ்பா படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ராஷ்மிகா மந்தண்ணா அல்லு அர்ஜூனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy birthday @alluarjun .. my Pushpaaaaaaa.. 🔥💣💣💣💣
— Rashmika Mandanna (@iamRashmika) April 8, 2022
The world already loves you but I hope this birthday people in every corner the world loves you how India loves you.. 🔥🔥🤗
Only and only love and admiration for you sir.. 🤗
sending you tons of love ❤️🤗🤗🤗🥰
ராஷ்மிகா மந்தண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து குறிப்பிடுகையில், “ஹேப்பி பர்த்டே மை புஷ்பா… ஏற்கெனவே, உலகம் உன்னை நேசிக்கிறது, ஆனால் இந்த பிறந்தநாளில் உலகின் எல்லா மூலையிலும் உள்ள மக்களும் நேசிக்கிறார்கள். இந்தியாவே உங்களை எப்படி நேசிக்கிறதோ, அப்படியே நான் விரும்புகிறேன். உங்கள் மீது அன்பும் அபிமானமும் மட்டுமே.. உங்களுக்கு டன் கணக்கான அன்பை அனுப்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் அல்லு அர்ஜுன் உடன் இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஸ்டேட்டாஸாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் உடன் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா ஜோடியாக நடித்திருந்தார்.
அண்மையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தண்ணா இணைந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தண்ணா தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ராஷ்மிகா மந்தண்ணா, தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோவுடன் இணைந்துள்ளார். அடுத்து பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
விஜய்யின் புதுப்பட நடிகை ராஷ்மிகா மந்தண்ணா, தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, அவருக்கு டன் கணக்கில் அன்பை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.