இதுதாம்பா பாசம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை க்யூட்டாக கலாய்க்கும் நிஜ தங்கை!

Vijay TV pandian stores serial actor kannan with his sister photo goes viral: சரவண விக்ரம் மற்றும் அவரது தங்கையும் இணைந்து சில கலாட்டா வீடியோக்களையும் செய்துள்ளனர். அதனையும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Vijay TV pandian stores serial actor kannan with his sister photo goes viral: சரவண விக்ரம் மற்றும் அவரது தங்கையும் இணைந்து சில கலாட்டா வீடியோக்களையும் செய்துள்ளனர். அதனையும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இதுதாம்பா பாசம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை க்யூட்டாக கலாய்க்கும் நிஜ தங்கை!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் உள்ளது.

Advertisment

கூட்டுக்குடும்பத்தை பற்றிய கதை என்பதாலும், கஷ்டப்பட்டு முன்னேறி வரும் அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை என்பதாலும் தமிழ் குடும்பங்களிடையே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சீரியலில் சுஜிதா, குமரன், காவ்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் கூட்டுக் குடும்பத்தில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக நடித்து வருபவர் விஜே சரவண விக்ரம். இதுநாள் வரையில் சீரியலில் ஜோடி இல்லாமல் இருந்த இவருக்கு, தற்போது ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலிப்பது போல் சீரியலின் கதை செல்கிறது.

இந்த நிலையில், தற்போது சரவணன் தனது சொந்த குடும்பத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் அனைவரும் லைக் செய்து வருகின்றனர். மேலும் அந்த குடும்ப போட்டோவில் இருக்கும் அவரது தங்கையைப் பார்த்து, இவருக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்காங்களா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

சரவண விக்ரம் மற்றும் அவரது தங்கையும் இணைந்து சில கலாட்டா வீடியோக்களையும் செய்துள்ளனர். அதனையும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ஒரு வீடியோவில், விஐபி படத்தில் வரும் பாடலை வைத்து சரவண விக்ரமை கலாய்க்கிறார் அவரது தங்கை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் சரவண விக்ரமுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video Pandian Stores Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: