scorecardresearch

எஸ்.ஏ.சி மிஸ்ஸிங்… அம்மாவுடன் நடிகர் விஜய் : பெற்றோரின் 50-வது திருமண நாள் புகைப்படம் வைரல்

கடந்த ஆண்டு எஸ்ஏ.சந்திரசேகர் தனது பிறந்தநாளை தனது மனைவி ஷோபாவுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடினார்.

Vijay Shoba
நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுடன்

தனது பெற்றோரின் 5-வது பிறந்த நாள் விழாவில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தப்பட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சமீப காலமாக அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் விஜய் சமீபத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே சமீப காலமாக விஜய் தனது பெற்றோரான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்-ஷோபா இருவருடனும் பேசாமல் இருந்து வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து பல யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த ஆண்டு எஸ்ஏ.சந்திரசேகர் தனது பிறந்தநாளை தனது மனைவி ஷோபாவுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.  

இதன் மூலம் விஜய் தனது பெற்றோரிடம் பேசுவதில்லை என்ற தகவல் உறுதியான நிலையில், அவர் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் அவர்களை கவனிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாக தொடங்கியது. இதனிடையே, சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா தம்பதி தங்களது 50 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது விஜய் தனது அம்மா ஷோபனாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தில், விஜய் தனது புதிய தோற்றத்துடன் இருக்கிறார். விஜய்க்கு அவரது அப்பாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், சந்திரசேகரின் கருத்துப்படி விஜய் எப்போதும் தனது தாயுடன் சமரசமாக இருந்து வருகிறார் எனபது இந்த புகைப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை பதிவு செய்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் தனது பெயரை தனது தந்தை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கட்சியில் ரசிகர்களை சேர வேண்டாம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது பெற்றோரை அழைத்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு குறைந்ததாக தெரிந்தது. இப்போது, விஜய் மற்றும் அவரது அம்மாவின் புதிய படம் சமூக ஊடகங்களில் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஆனாலும் இந்த புகைப்படத்தில் எஸ்.ஏ.சி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay poses with mom shobana as he joins parents to celebrate their 50th wedding anniversary