பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான யுகேந்திரன் வாசுதேவன் மற்றும் வினுஷா 4 ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், இதுதொடர்பாக விஜய் டிவி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார் யுகேந்திரன் வாசுதேவன். இவர் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். திருப்பாச்சி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தன் மூலம், வெளிச்சம் பெற்ற யுகேந்திரன், சில பாடல்களையும் பாடியுள்ளார். இருப்பினும் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்தார். இந்தநிலையில் தான் யுகேந்திரன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக் கொண்டார்.
அதேபோல், பாரதி கண்ணம்மா என்ற மெகா ஹிட் சீரியல் மூலம் கண்ணம்மாக பிரபலமானவர் வினுஷா தேவி. பின்னர் பாரதி கண்ணம்மா சீசன் 2விலும் நடித்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் யுகேந்திரன் ஆடிய விதத்தை பலரும் பாராட்டினார். ஆரம்பத்தில் இவருடைய நிதானமான விளையாட்டு மற்றும் நியாயமான பேச்சு பலரையும் கவர்ந்தது. ஆனால், பின்னர் இவர் வீட்டின் தலைவராக மாறி இருந்த நிலையில், ஸ்மால் பாஸுக்கு ஆதரவாக இவர் ஆக்சிஜன் டாஸ்க்கில் விளையாடிய விதம் பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றது.
இதற்கிடையில், யுகேந்திரன் இரண்டு வாரங்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் தாக்க பிடித்தால் போதும் என்று இவருடைய மனைவியும் வெளியே பேட்டி கொடுத்து இருந்தார். அதுபோலவே தற்போது மூன்று வாரம் முடிவு அடைந்ததும் நான்காவது வாரத்தில் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வினுஷா இந்த சீசனில் வலுவான போட்டியாளராக இருப்பார் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில், அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் அவரும் இந்தவாரம் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் நடந்துள்ளது.
இந்தநிலையில், விஜய் டிவி, மிக்சர் புகைப்படத்தை வைத்து bye bye என்று பிக் பாஸை டேக் செய்து பதிவு ஒன்று போட்டு இருந்தது. இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும், போட்டியாளர்களை கூப்பிட்டு இந்த மாதிரி கேவலப்படுத்தலாமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் யுகேந்திரன் வெளியே வந்ததும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "முடிந்தவரை முயற்சி செய்வோம்.. முடிவை ஏற்றுக்கொள்வோம்" என்று தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதோடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்காக ரசிகர்கள் வைத்த ஸ்டோரிகளையும் பகிர்ந்து இருக்கிறார். மேலும், வெளியே வந்ததும் தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படத்தை அவருடைய மனைவி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அதையும் தன்னுடைய ஸ்டோரியில் யுகேந்திரன் பகிர்ந்துள்ளார்.
அதேநேரம், யுகேந்திரன் வெளியே வந்தாலும் அவரைப் பற்றி ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்துள்ளதால், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.