Advertisment

'ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 ஸ்டோரி விஜய்க்கு ரொம்ப பிடிச்சு போச்சு': லோகேஷ் கனகராஜ்

'லியோ' படப்பிடிப்பின் போது தளபதி விஜய்யிடம் 'தலைவர் 171' ஸ்கிரிப்டை விவரித்ததையும் லோகேஷ் வெளிப்படுத்தினார். அதைக் கேட்டு தளபதி விஜய், “படத்தின் கதை நன்றாக இருப்பதாக பாராட்டினார்” எனத் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Lokesh Kanagaraj

அண்மையில் விஜய், ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட சர்ச்சை காரணமாக மோதிக்கொண்டனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் உலகெங்கிலும் அக்.19ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்குகிறார்.

Advertisment

இந்தப் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “மாநகரம் படத்திற்கு முன்பே 'தலைவர் 171' படத்தின் ஸ்கிரிப்டை எழுதியதாக பகிர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார் ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் அதே ஸ்கிரிப்டை ரஜினியிடம் கூறி ஒப்புதல் வாங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 'லியோ' படப்பிடிப்பின் போது தளபதி விஜய்யிடம் 'தலைவர் 171' ஸ்கிரிப்டை விவரித்ததையும் லோகேஷ் வெளிப்படுத்தினார்.

அதைக் கேட்டு தளபதி விஜய், “படத்தின் கதை நன்றாக இருப்பதாக பாராட்டினார். விஜய்க்கு அந்தக் கதை பிடித்திருந்தது” எனத் தெரிவித்தார். மேலும், ரஜினியை தாம் சந்திக்கும் போதெல்லாம் அவர் லியோ படத்தின் கதையை ஊக்குவிப்பார் என்றும் லோகி தெரிவித்தார்.

அண்மையில் விஜய், ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட சர்ச்சை காரணமாக மோதிக்கொண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lokesh Kanagaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment