Rajinikanth and Vijay Fans unites against Ajith: முன்னணி திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் கூறிய, பெரிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த கருத்துக்கள் தான், அஜீத்தை குறிவைக்க விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ’டூலாக’ மாறியுள்ளன. அஜித்தின் ‘விஸ்வாசம், மற்றும் ‘நேர்க்கொண்ட பார்வை’ ஆகியப் படங்களின் வசூல் போலியானவை என்பது தான் இவர்களின் வாதம்.
Advertisment
சமீபத்தில் ஒரு யூ - ட்யூப் சேனலுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியில், இரண்டு திரைப்படங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இரண்டு பெரிய படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் மோதல்களைப் பற்றிப் பேசினார். ”இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே போட்டி நிலவியது. ஒரு விநியோகஸ்தர் ஒரு திரைப்படம் ரூ 100 கோடியை ஈட்டியதாகவும், மற்றொருவர் தனது படம் ரூ 125 கோடியை ஈட்டியதாகவும் சொல்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டார்.
Ner Konda Paarvai
மேலும் தொடர்ந்த சுப்பிரமணியன், ”வெள்ளிக் கிழமை படம் ரிலீஸாகி, சனிக்கிழமை காலை மாபெரும் வெற்றி என போடுவதை முதலில் நிறுத்த வேண்டும். ட்விட்டர்ல ஒரு வசூலை போட்டு விட்டு, 80 கோடியை போய் கொடுக்கிறார்கள். என்னய்யா அத்தனை கோடின்னு ட்விட்டர்ல போட்டன்னு கேட்டா, நான் என்ன சார் பண்றது, ரசிகர்கள சந்தோஷப் படுத்த அப்படி போட்டேன்னு சொல்றாரு” என்றார்.
Advertisment
Advertisements
திருப்பூர் சுப்பிரமணியத்தின் கருத்துகள், 2019-ன் தொடக்கத்தில் வெளியான ’பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகியப் படங்களைப் பற்றி தான் என்பது தெளிவாகப் புரிகிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய போட்டி ஏற்படவில்லை.
’விஸ்வாசம்’ படத்தை விநியோகித்த கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் ஆன்லைனில் தங்களது படம் குறித்து, ஆக்ரோஷமான விளம்பரங்களை வெளியிட்டதுடன், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அந்தப் படம் ஈட்டிய வசூல் குறித்தும் தொடர்ந்து அறிவித்து வந்தது. அதேசமயம், ‘பேட்ட’ திரைப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், படம் குறித்த அப்டேட்டுகளை அளித்து வந்தது.
இன்னும் ஒரு படி மேலே சென்று, அஜித்தை விட ரஜினிகாந்த்துக்கு பெருமளவில் மார்க்கெட் இருந்தாலும், தமிழ்நாட்டில், ’பேட்ட’ திரைப்படத்தை விட ’விஸ்வாசம்’ அதிக வியாபாரம் செய்ததாக கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் கூறி வந்தது.
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க:
ஆன்லைன் டிரேடர்ஸ்களும் கூட பாக்ஸ் ஆபிஸில் ’விஸ்வாசம்’ வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ள கருத்துக்கள் தான், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களை, அஜித்தின் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட் குறித்து கேள்வி எழுப்ப வலுவான காரணங்களாக அமைந்துள்ளன.
தவிர, ’நேர்க்கொண்ட பார்வை’ வசூலைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”வெளியில் நாம் வெற்றி என சொன்னாலும், அதன் உண்மையான நிலை தயாரிப்பாளருக்கு தான் தெரியும். காரணம், அஜித், வித்யா பாலன் போன்ற பெரிய நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து தான், இதனை சொல்ல முடியும்” என்றார்.