இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய் குமார் 6 வது இடத்தில் தான் இருக்கிறார். முதல் ஐந்து இடங்களையும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தை சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர்.
இந்தியர்கள் விரும்பும் ஓர்மாக்ஸ் ஸ்டார்ஸ் என்ற விருது பட்டியலின் முடிவுகளை ஓர்மாக்ஸ் ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களின் படியலில் விஜய் முதல் இடத்தையும், பிரபாஸ் இரண்டாம் இடத்தையும், யாஷ் மூன்றாம் இடத்தையும், அல்லு அர்ஜூன் நான்வது இடத்தையும், ஜூனியர் என்டிஆர் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்ஷய் குமார் 6 வது இடத்தைதான் பிடித்துள்ளார். மேலும் அஜித் 8 வது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இந்தி திரைப்பட நடிகர்கள் பின்தங்கி உள்ளனர்.
இதுபோல மிகவும் பிரபலமான நடிகை பட்டியலில் சமந்தா முதல் இடத்தையும் , ஆலியா பட் இரண்டாம் இடத்தையும், நயன்தாரா முன்றாம் இடத்தையும் , திபிகா படுகோன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் 7 வது இடத்தை பிடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“