/indian-express-tamil/media/media_files/fCR9SAwmwT03MNUpPssG.jpg)
கையில் கத்தி, உடல் எங்கும் ரத்தக் கறை... ’மகாராஜா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு; விஜய் சேதுபதியின் 50-வது படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு, ‘மகாராஜா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதில் இடிந்த நிலையில் உள்ள ஒரு இடத்தில், சலூன் நாற்காலியில் விஜய் சேதுபதி அமர்ந்துள்ளார். கையில் ரத்தம் தோய்ந்த பட்டா கத்தி ஒன்றை வைத்துள்ள அவரது உடல் முழுவதும் ரத்தக் கரை உள்ளது. காது அறுபட்டு கட்டு போடப்பட்டுள்ளது. பின்னணியில் போலீசார் நின்றிருக்கின்றனர்.
#MaharajaFirstLook@Dir_nithilan@PassionStudios_@TheRoute@Sudhans2017@Jagadishbliss@anuragkashyap72@Natty_Nataraj@mamtamohan@Abhiramiact@AjaneeshB@Philoedit@DKP_DOP@ActionAnlarasu@ThinkStudiosInd@infinit_maze@jungleeMusicSTH@Donechannel1#VJS50FirstLook#VJS50… pic.twitter.com/7fF5Y2rDao
— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2023
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள முடிவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.