Vijay Sethupathi 46th Movie update : முன்னணி நடிகரான விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பீட்சா, சூதுகவ்வும், 96, தர்மதுரை, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல், சுந்தரபாண்டியன், பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்துள்ள விஜய்சேதுதி எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பில் தனது தனி முத்திரையை பதித்து வருகிறார்.
இதனிடையே மாமனிதன் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக விஜேஎஸ் 46 என்று தலைப்பிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேதுபதி படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே தற்போது விஜய் சேதுபதி - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு டி.எஸ்.பி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி மாஸாக ராயல் என்ஃபீல்டில் வருவது போன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்திவாஸ் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil