/tamil-ie/media/media_files/uploads/2020/01/ashwanth-viral.jpg)
vijay sethupathi, vijay sethupathi birthday wishes, விஜய் சேதுபதி, வைரல் வீடியோ, விஜய் சேதுபதி பிறந்தநாள் வாழ்த்து, ராசுக்குட்டி வைரல் வீடியோ, அஷ்வந்த் அஷோக்குமார், supre deluxe rasukutti ashwanth ashokkumar mimicry, ashwanth ashokkumar mimicry in vijay sethupathi, ashwanth ashokkumar, rasukutti viral video
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டியாக நடித்த சிறுவன் அஷ்வந்த் அஷோக்குமார், நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் மிமிக்ரி செய்து சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய முதல்படம் ஆரண்ய காண்டம். தனது முதல் படத்திலேயே இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதற்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை இயக்க மிக நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட அவர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ஃபகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிருனாளினி உள்ளிட்ட பல நடிகர்களைக் கொண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கினார். இந்த படம், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் ஒரு மைல் கல் என்று சொல்லும்படியாக அமைந்தது.
அதிலும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் அரவாணியாக நடித்த விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த சிறுவன் அஷ்வந்த் அஷோக்குமார் நடிப்பு பெரிய அளவில் அனைவரையும் கவர்ந்தது.
Happy birthday @VijaySethuOffl sir. love you so much ????????????#SuperDeluxe#Rasukutty#Ashwanthpic.twitter.com/U3X9UFU4i2
— Ashwanth Ashokkumar (@actorashwanth) January 16, 2020
இந்த நிலையில், வியாழக்கிழமை நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி அஷ்வந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அஷ்வந்த் விஜய் சேதுபதியின் குரலில் மிமிக்ரி செய்து கூறுகையில், சூப்பர் டீலக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்திருந்த ரசிகர்களில் பெண் ஒருவரிடம் விஜய் சேதுபதி “அக்கா எப்படி இருக்கீங்க? உங்க வீட்ல இன்னைக்கு என்ன கொழம்பு?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண் “நல்லா இருக்கிறோம். எங்க வீட்ல மீன் கொழம்பு, நீங்க வந்து சாப்பிடுவீங்களா என்ன?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி அவருடைய வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார். பின்னர், ஒருநாள் சாப்பாடு கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்க விஜய் சேதுபதி அவருடைய வீட்டிற்கு சென்று நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வைக் கூறிய அஷ்வந்த், இது தனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்றும் விஜய்சேதுபதி மாறாமல் என்றும் இப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டு அவருக்கு பிறந்தநால் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.