New Update
/indian-express-tamil/media/media_files/NJ9YWKaAJe3gEcwTtwVq.jpg)
கோவாவில் ஹாப்பி விஜய் சேதுபதி
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, அங்கே மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் போட்டிங் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
கோவாவில் ஹாப்பி விஜய் சேதுபதி
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, அங்கே மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் போட்டிங் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், மோலிவுட் என எல்லா வுட் படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றுமொரு பாலிவுட் படமான காந்தி டாக்ஸ் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மௌன படமான இந்த படத்தில், விஜய் சேதுபதி உடன் அதிதி ராவ் ஹைடரி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து, விஜய் சேதுபதி மௌனப் படத்தில் நடித்துள்ளார் என்ற முத்திரையைப் பதித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து உள்ளார்.
திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காந்தி டாக்ஸ் கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்பட்டு உள்ளது. இதற்காக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காந்தி டாக்ஸ் படக்குழுவினர் கோவாவுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கெ வந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரை சந்தித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல், விஜய் சேதுபதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் சேர்ந்து ஜாலியாக போட்டிங் செய்திருக்கிறார். விசைப் படகில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் விஜய் சேதுபதியே போட்டை ஓட்டிச் சென்றுள்ளார்.
கோவாவில் விஜய் சேதுபதி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் சேர்ந்து படகு சவாரி சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே போல, நடிகை குஷ்பு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி கோவாவில் இருந்து திரும்பியதும், மிஷ்கின் இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.