Vijay Sethupathi confirms bollywood actor Aamir Khan collaboration -‘நான் அமீர்கானுடன் இணைந்து நடிக்கிறேன்’ – உறுதி செய்த விஜய் சேதுபதி
பாலிவுட் நடிகர் அமீர் கான் விஜய்சேதுபதியுடன் இணைந்து பணிபுரிகிறார். இத்தகவலை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி உறுதி செய்திருக்கிறார்.
“நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம், விரைவில் முறையான அறிவிப்பு வரும்” என்று பிடிஐயிடம் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விஜய் சேதுபதியின் ‘சங்க தமிழன்’ படப்பிடிப்பு தளத்துக்கு அமீர் கான் சென்ற போது, இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், விஜய் சேதுபதி தற்போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் பிடிஐயிடம் பேசிய விஜய் சேதுபதி, “அமிதாப் பச்சன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நான் அவருடைய பிங்க் உட்பட பல படங்களை பார்த்திருக்கிறேன். ஷாருக் கானை இந்த விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இந்த விழாவில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.