அவதூறு பரப்புவதா? விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்

நடிகர் விஜய் சேதுபதி ஒராண்டுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் கோயிலில் அபிஷேகம் செய்வதைப் பற்றி கூறிய நகைச்சுவை வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை அவமதித்து அவதூறு தெரிவிக்கப்பட்ட கம்மெண்ட்களை நீக்குமாறு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

By: Updated: May 12, 2020, 01:21:15 AM

நடிகர் விஜய் சேதுபதி ஒராண்டுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் கோயிலில் அபிஷேகம் செய்வதைப் பற்றி நகைச்சுவை ஒன்றை பகிர்ந்துகொண்ட வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை அவமதித்து அவதூறு தெரிவிக்கப்பட்ட கம்மெண்ட்களை நீக்குமாறு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி மே 13, 2019 அன்று ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் கோயிலில் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைப் பற்றி ஒரு நகைச்சுவையை பகிர்ந்துகொண்டார். அவர் இந்து மதத்தின் கோயில் வழக்கத்தையும் இந்துக்களின் உணர்வையும் புன்படுத்திவிட்டதாகக் கூறி பலரும் விஜய் சேதுபதி பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் வைரலாகி சர்ச்சையானது.

ஓராண்டுக்கு முன்பு விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவமதித்து அவதூறு கம்மெண்ட் செய்தனர்.


இதையடுத்து விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சமூக ஊடகங்களில் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான அவமரியாதை கருத்துக்களை நீக்க கோரி, சென்னை சைபர் கிரைம் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றத் தலைவர் ஜே.குமரன் சனிக்கிழமை புகார் அளித்தார். எதிர்காலத்தில் இணையத்தில் நடிகருக்கு எதிராக இதுபோன்ற உணர்ச்சிகரமான கருத்துக்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆண்டுக்கு முன்பு கூறிய அதே நகைச்சுவையை மறைந்த நகைச்சுவை எழுத்தாளர் ‘கிரேஸி’ மோகனால் குறைந்தது இரண்டு முறையாவது கூறப்பட்டுள்ளது. அதனால், ஒரே நகைச்சுவையைக் கூறிய நடிகருக்கும் நகைச்சுவை எழுத்தாளருக்கும் காட்டப்படும் வேறுபாடுகளை சினிமா நட்சத்திரங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay sethupathi fans club file complaint against abusive comments on his controversy joke viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X