Advertisment

விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதி ரசிகர்கள் கல்விக்காக நிதி உதவி; சென்னை மாணவி கல்லூரி செல்ல ஏற்பாடு

ஏழ்மையால் கல்லூரி செல்ல முடியாமல் தவித்த சென்னை மாணவி; ஓடி வந்து உதவிய விஜய் சேதுபதி ரசிகர்கள்

author-image
WebDesk
New Update
vijay-sethupathi

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சார்பில் அவரது ரசிகர்கள் சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.

Advertisment

நடிகர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை வரவழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் விஜய் கல்வி குறித்து, அரசியல் குறித்தும் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை எழுப்பியது.

இதையும் படியுங்கள்: ‘இளையராஜா இதைச் செய்யவில்லை; ஆனால் ஏ.ஆர் ரகுமான்…’ நெகிழ்ந்து பேசிய வடிவேலு

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சார்பில் அவரது ரசிகர்கள் சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளனர். சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த அஸ்புதின் என்பவரது மகள் ஜாஸ்மின், இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு ஏழ்மை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். இதையறிந்த விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள், மாணவி கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment