Advertisment
Presenting Partner
Desktop GIF

‘எனக்கு நடிக்கக் கற்றுக் கொடுக்காதீர்கள்’ - விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி!

ரசிகர்களால் மக்கள் செல்வன் என கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், விக்னேஷ் சிவனுடன் பணிபுரிவது பற்றியும், ஆரம்பத்தில் அவருடன் பணி புரிவது எப்படி இருந்தது என்பது பற்றியும் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi

காத்துவாகுல ரெண்டு காதல் படத்தின் செட்டில் விக்னேஷ் சிவனுடன் விஜய் சேதுபதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனுடன் எப்படி பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதை விஜய் சேதுபதி சமீபத்தில் வெளிப்படுத்தினார். இது நடிகர் மற்றும் இயக்குனர் இருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக மாறியது. ஒரு நடிகராக தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் தன்னை எவ்வாறு வடிவமைத்தனர் என்பதைப் பற்றி பேசுகையில், விஜய் சேதுபதி இயக்குனர்களுடன் பல சண்டைகளை நினைவு கூர்ந்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vijay Sethupathi fought with Vignesh Shivan during Naanum Rowdy Thaan: ‘I told him not to teach me acting’

இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னிடம் வித்தியாசமாக வேறு ஏதாவது கேட்டதால், முதலில் அவருடன் நன்றாகப் பழகவில்லை என்று மகாராஜா பட நடிகர் விஜய் சேதுபதி கூறினார். இருவரும் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் ஆனது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நானும் ரவுடி தான் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு பிறகு விக்கியை அழைத்து சண்டை போட்டேன். நான் அவரிடம், ‘எனக்கு நடிப்பு கற்றுத்தர முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.’ நான்கு நாட்களுக்குப் பிறகு, நயன் (தாரா) என்னிடம் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று கேட்டார். அதிக ட்ரெண்டியாக பாண்டி கேரக்டரில் நடிக்கும்படி அவர் என்னிடம் கேட்கிறார் என்று சொன்னேன்.

விஜய் சேதுபதி மேலும் கூறுகையில், “விக்கி திரைக்கதையைக் கூறியபோது, ​​அது அருமையாக இருந்தது. நான் உண்மையில் விக்கியை மட்டுமே பின்பற்ற முயற்சிக்கிறேன், ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நேரம் பிடித்தது. அந்த கேரக்டரில் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால்தான் சரியாகச் சொன்னார் என்று நினைக்கிறேன். அவன், அழுதால் எல்லோரும் சிரிக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பையன், ஆனால் ஒரு மோசடிகாரர். முதல் நான்கு நாட்களுக்கு அந்த கதாபாத்திரம் எனக்கு புரியவில்லை, அந்த நேரத்தில் நான் மிகவும் உறுதியில்லாமல் இருந்தேன்.” என்று கூறினார்.

விக்னேஷ் சிவன் ஒரு சிறப்பான இயக்குனர் என்றும், அவர் புதிய தலைமுறை படத் தயாரிப்பாளர் என்றும் விஜய் சேதுபதி கூறினார். “காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரி ஒரு விஷயத்தை நாங்க தொடவே மாட்டோம். அவரை யாரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அவரை நம்பி உடன் சென்றால், அவர் உள்ளே நிறைய மந்திரங்களை உருவாக்குவார். அதுபோல, பல அனுபவங்கள் என்னை இன்றைய நிலையில் ஆக்கியுள்ளன.” என்று கூறினார்

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மஹாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்ற்னர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment