Advertisment

புதுச்சேரியில் விஜய் சேதுபதி... துணை நிலை ஆளுநருடன் சந்திப்பு

'மகாராஜா திரைப்படம் பார்த்தேன். அதில் உங்கள் நடிப்பு மிக இயல்பாக இருந்தது' என்று நடிகர் விஜய் சேதுபதியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பாராட்டினார்.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi meeting with puducherry governor Kuniyil Kailashnathan Tamil News

நடிகர் விஜய் சேதுபதி - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் சந்திப்பு

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

Advertisment

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரியில் நடைபெறும் படபிடிப்பில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி ஏற்று கொண்ட கைலாசநாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மகாராஜா திரைப்படம் சிறப்பாக இருந்ததாகவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாகவும் விஜய் சேதுபதிக்கு ஆளுநர் கைலாசநாதன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய் சேதுபதிக்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் சால்வை அணிவித்து மகிழ்ந்தார். இதேபோல், துணை ஆளுநருக்கு நடிகர் விஜய் சேதுபதி சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து துணைநிலை ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி அரை மணி நேரம் உரையாடினார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Puducherry Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment