/tamil-ie/media/media_files/uploads/2018/01/vijay-sethupathi.jpeg)
vijay sethupathi, நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் மணிகண்டனின், ‘கடைசி விவசாயி’, விஜய் சந்தரின் ‘சங்கத் தமிழன்’, எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டுமொரு படத்தில் விஜய் சேதுபதி. ஆனால் இது சற்றே வித்தியாசமான திரைப்படம். ஆம்! பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ’800’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/muttiah-muralitharan-biopic.jpg)
இலங்கையிலுள்ள கண்டியில் 1972-ம் ஆண்டு பிறந்த தமிழரான முத்தையா முரளிதரன், 1992 முதல் 2011 வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி-20 ஆட்டங்களில் இலங்கை அணிக்காக விளையாடியவர். சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். அதன் காரணமாகவே அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கவிருக்கிறதாம்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதோடு, இந்தியா 1983-ல் உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து ‘1983’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர், ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் முளனிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டுமொரு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.