Advertisment
Presenting Partner
Desktop GIF

விஜய் சேதுபதியை வீட்டுக்கு அழைத்த அமீர் கான்; லால் சிங் சத்தா-வில் நடிக்க இருந்தது டிராப்

விஜய் சேதுபதி, தனது முதல் மும்பை வருகையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார், அமீர் கான் எப்படி ஒரு அன்பான மனிதர் என்பதை நினைவு கூர்ந்தார்.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi

விஜய் சேதுபதியை வீட்டுக்கு அழைத்த அமீர் கான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது அடுத்த படமான மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் கத்ரீனா கைஃப் உடன் ஜோடியாக நடிக்க தயாராகி வருகிறார். முன்னதாக ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, முதன் முதல் மும்பைக்கு சென்ற நினைவுகளைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அமீர்கானின் லால் சிங் சத்தாவை தான் நடிக்க இருந்ததையும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vijay Sethupathi says he was supposed to do Laal Singh Chaddha, reveals Aamir Khan invited him to his apartment: ‘He dropped me back…’

மாஷபிள் உடனான ஒரு நேர்காணலில், விஜய் சேதுபதி, “நான் லால் சிங் சத்தாவை நடிக்கவிருந்தேன். அதனால் மதியம் டைரக்டரைச் சந்தித்துவிட்டு, கிளம்பும்போது அமீர் சார் என்னைக் கூப்பிட்டு, ‘சந்திக்கலாமா?’ என்றார், நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அதனால், முதன்முறையாக நான் மும்பைக்கு வந்தபோது, ஒரு நட்சத்திரத்தின் வீட்டிற்குச் சென்று அவருடன் காபியும் சிகரெட்டும் குடித்தேன். அதன் பிறகு, அமீர் சார் வந்து என்னை விமான நிலையத்தில் இறக்கிவிட்டார்.

2022 இல் வெளியான லால் சிங் சத்தா, டாம் ஹாங்க்ஸ் நடித்த ஃபாரெஸ்ட் கம்ப் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த இந்த திரைப்படத்தில், கரீனா கபூர் கான் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

விஜய் சேதுபதி தனது நடிப்பு பயணத்தைப் பற்றியும் மனம் திறந்து பேசினார். தனது மனைவியின் கர்ப்பமாக இருந்தபோது, துபாயில் கடுமையான கணக்காளர் வேலையை விட்டு வெளியேற வழிவகுத்தபோது, ஆரம்பத்தில் அவர் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டார் என்பதை விவரித்தார்.

நாடகக் குழுவில் சேர்ந்த பிறகு, உண்மையான நடிப்பைக் கற்பிக்க முடியாது, ஆனால், தனக்குள்ளேயே கண்டுபிடிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். ஆர்வத்துடன், அவர் இரண்டு ஆண்டுகளாக நடிகர்களைக் கவனித்து, இறுதியில் தொழில்துறையில் நுழைந்தார். அவரது ஆரம்ப இலக்கு ஸ்டார் ஆவது அல்ல. ஆனால், பணம் சம்பாதிப்பது, ஒரு அடுக்குமாடி வீடு மற்றும் பழைய கார் வாங்குவதை நோக்கமாக இருந்தது என்று கூறினார். 

மெர்ரி கிறிஸ்மஸ் படம் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment